குடித்துவிட்டு கும்மாளம் போட்ட நியூசிலாந்து வீரர்கள் இடைநீக்கம்!!

403

Jessy Raiderபாரில் மது அருந்தி விட்டு கும்மாளம் போட்ட வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஜெசி ரைடர், வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் இடம் பிடித்திருந்தனர். இவர்களுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய தினம் ஆக்லாந்தில் உள்ள மது அருந்தும் பாரில் கும்மாளம் அடித்து விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய நியூசிலாந்து கிரிக்கெட் சபை இந்த 2 வீரர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த 2 வீரர்கள் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.