மூக்கை மூடும்படி முகக்கவசம் அணியாவிட்டால் நிலமை மேலும் மோசமடையும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

801

மூக்கை மூடும்படி முகக்கவசம்..

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் முகக் கவசங்களை அணியும் நபர்கள், அதனை தமது மூக்கை மூடும் படியாக அணியாவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மூக்கை மூடாது முகக் கவசத்தை அணிந்தால், தொண்டை மற்றும் நுரையீரலை தாக்கும் முன்னர் கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மிக இலகுவாக உடலுக்குள் சென்று தொற்றிக்கொள்ளும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மூக்கு வழியாக செல்லும் கொரோனா வைரசுக்கு நான்கு தினங்களில் 10 மில்லியன் பிரதிகளை உருவாக்க முடியும் என்பதால், மூக்கு மற்றும் வாய் ஆகிய இரண்டை மூடும்படியாக முகக் கவசத்தை அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் ருந்து தப்பிக்க முடியும் எனவும் இது மிக முக்கியமான சுகாதார நடவடிக்கை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் மூன்று அடுக்குகளை கொண்ட முககவசங்களை சரியாக அணிந்தால், கொரோனா வைரஸ் தொற்றுவது 80 வீதம் குறையும் என நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும் பல சந்தர்ப்பங்களில் வீதிகளில் செல்லும் நபர்கள் முககவசங்களை அணிவதில்லை. அப்படி அணிந்தாலும் மூக்கை மூடியபடி அவற்றை அணியவதில்லை என்பதை சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் குறித்து சரியாக புரிந்துக்கொண்டால், இப்படி கவன குறைவாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.