நாளை சூரிய கிரகணம் : இவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாதாம்!!

3122

நாளை சூரிய கிரகணம்..

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும்.

இந்த கிரகணமானது பல நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம். இந்நிலையில் இங்கு சூரிய கிரகணத்தை பொறுத்தவரை பல்வேறு நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் ஆயுர்வேத முறைப்படி உருவானவையாகும். சூரியன் முழுமையாக தெரியாத காரணத்தினால் சூரிய கிரகணத்தின் நேரமானது , கெட்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால் கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சூரிய கிரகணத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்? : சூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும். “சகல தோஷம் நிவர்த்தியாமி” என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும்.

2020 ஆம் ஆண்டு தற்போது வரை பிறந்த குழந்தைகள் நிச்சயமாக சில தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தோஷநிவர்த்தி வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

வீட்டின் வாசலில் மாவிலை மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டும். அபிஷேகம் செய்து முடித்தபின்னர் விக்ரகங்களுக்கும், படங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

இந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும். அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால் நிச்சயமாக சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது.

மூன்று மணி நேர சூரிய கிரகணம் : தவறியேனும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!!

சூரிய கிரகணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கவுள்ள நிலையில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ மயூரக்குருக்கள் குறிப்பிட்டுள்ளார். எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சூரியகிரகணம் தென்படுகிறது. இலங்கையில் காலை 10.22 மணி முதல் பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த சூரிய கிரகணத்தினை நாம் அவதானிக்க முடியும்.

இக்காலப்பகுதியிலே தெளிவாக தெரிவதுடன் இலங்கையில் வாழும் மக்கள் இதனை பார்க்க முடியும். சூரிய கிரகணத்தினை நாம் வெற்றுக் கண்ணினால் பார்க்ககூடாது.

சூரிய கிரகணத்தினை பார்க்க வேண்டுமாயின் துணியினை நீரில் நனைத்து அதன் ஊடாக சூரியனை நாம் பார்க்கலாம் அல்லது கண்ணாடி கொண்டோ அல்லது நீர் நிலைகளினூடாகவோ பார்க்க முடியும்.

வெற்றுக்கண்ணால் பார்ப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காலப்பகுதிகளில் கர்ப்பிணிகளாக இருக்கின்ற பெண்கள் வெளியில் திரிவதனையோ அல்லது கிரகண காலத்தில் சூரியனை பார்ப்பதனையோ தவிர்த்து கொள்ளுங்கள்.

கிரகண காலத்தில் சூரியனில் இருந்து வெளியேறுகின்ற புறவூதாக் கதிர்களின் தாக்கம் அவர்களை இலகுவில் தாக்கும் தன்மை கொண்டவை. அதனாலே தான் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெளியில் வரக்கூடாது எனக் கூறப்படுகிறது.

இந்தக் காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பதனையோ, உணவுகளை உட்கொள்வதனையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சமைத்த உணவுகள் இருந்தால் அவற்றை தர்ப்பை புல் கொண்டு மூடிவைத்து கொள்ளுங்கள். கிரகண காலம் முடிந்ததும் அவற்றை எடுத்து விட்டு உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது கிரகண காலம் முடிந்ததும் சமைத்து உண்ணலாம்.

ஆலயங்கள் கிரகண காலத்தின் முன்னர் பூஜைகள் முடிக்கப்பட்டு மூடப்படும். கிரகணகாலம் முடிந்ததும் பிராயச்சித்தம் செய்யப்பட்டு பூஜைகளுக்காக திறக்கப்படும்.

இக்காலத்தில் நீர்நிலைகளில் வழிபாடுகள் செய்தல் நன்மை பயக்கும். தர்பணங்கள் மற்றும் பாராயணங்கள் செய்வதால் பலமடங்கு பலனைத்தரும். எனவே அனைவரும் இவற்றைக்கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.