17 வயது கர்ப்பிணிக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் தெரிந்த உண்மை : ஆச்சரியப்பட்ட குடும்பம்!!

1355


17 வயது கர்ப்பிணிக்கு..



பிரித்தானியாவில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்த போது ஸ்கேன் பரிசோதனையில் அவர் வயிற்றில் பெண் குழந்தை இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.



Worcestershire-ஐ சேர்ந்தவர் Kacey Strickland (17). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது Kacey வயிற்றில் பெண் குழந்தை இருப்பதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.




இதை தொடர்ந்து குழந்தைக்கு Ella என பெயரையும் சூட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 27ஆம் திகதி Kaceyக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


Kacey பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அது அவரையும், அவர் குடும்பத்தாரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஒருசேர ஆழ்த்தியது.

இது குறித்து Kaceyன் 50 வயதான தாய் Julie Strickland கூறுகையில், பேத்தி பிறக்க போகிறாள் என எதிர்பார்த்த நிலையில் பேரன் பிறந்துள்ளான். சிசேரின் மூலமே குழந்தை அவளுக்கு பிறந்தது என கூறினார்.


Kacey கூறுகையில், பெண் குழந்தை தான் பிறக்க போகிறது என பெயர் கூட தேர்வு செய்து, அவளுக்கான உடைகளையும் தயார் செய்தோம்.

ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டது, இது முதலில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் மகிழ்ச்சியையே தந்தது. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் எப்படி பொய்த்து போனது என தெரியவில்லை, இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.