உடையால் சர்ச்சைக்குள்ளான ரஷ்ய செவிலியர் இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

940

ரஷ்ய செவிலியர்..

ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் உள்ளாடை தெரியும் வகையில் பிளாஸ்டிக்காலான பாதுகாப்பு உடை அணிந்ததால் சர்ச்சைக்குள்ளான செவிலியர் இன்று பிரபல நிறுவனத்தின் மொடலாகியுள்ளார்.

நாடியா ஸுகோவா (23) ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் கொரோனா பிரிவில் செவிலியராக பணியாற்றும்போது, உள்ளாடை தெரியும் வகையில் மெல்லிய பிளாஸ்டிக்காலான பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்.

அவரை ஒரு நோயாளி புகைப்படம் எடுக்க, அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. ஒரு பக்கம் ஆதரவு, மறு பக்கம் எதிர்ப்பு என அந்த படம் பரபரப்பை ஏற்படுத்த, நிர்வாகம் அவரை தண்டிக்க முடிவு செய்தது.

ஆனால், அதற்கும் எதிர்ப்பு தோன்றவே, நிர்வாகத்தின் தண்டிக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது.

தற்போது ரஷ்ய ஸ்போர்ட்ஸ் உடைகள் நிறுவனம் ஒன்றிற்கு மொடலாக போஸ் கொடுத்துள்ளார் நாடியா. ஆனாலும் மருத்துவமனை மீதான காதல் சற்றும் குறையவில்லை நாடியாவுக்கு. மருத்துவப்படிப்பு முடித்து மருத்துவராகப்போகிறாராம் நாடியா.