16 ஆண்டுகளுக்கு முன்னர் உ யிரிழந்த கணவன் : மீண்டும் தற்போது அவருடன் இணைந்த மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!

1621


நெகிழ்ச்சி சம்பவம்..



அமெரிக்காவில் கணவரும், மனைவியும் 16 வருட இடைவெளியில் நபர் ஒருவருக்கு தங்கள் உடல் உறுப்பை தானம் செய்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.



Bryan Herrington என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு சாலை விபத்தில் உ யிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகள் பல்வேறு நபர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது.




அப்படி Bryan-னின் கணையம் மற்றும் ஒரு சிறுநீரகம் Jeff Granger என்பவருக்கு தானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து மீண்டும் Jeff-ன் சிறுநீரகம் செயலிழந்தது.


இதை தொடர்ந்து Bryanனின் விதவை மனைவி Terri தனது ஒரு சிறுநீரகத்தை Jeff-க்கு கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இது குறித்து Terri கூறுகையில், 16 ஆண்டுகளுக்கு முன்னர் என் கணவரின் உடல் உறுப்புகள் Jeff-க்கு தானம் அளிக்கப்பட்ட போது அவர் எனக்கு நன்றி கூறினார்.

இதன்பின்னர் அவர் குடும்பத்தாரும், என் குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். தற்போது மீண்டும் அவருக்கு என் உடல் உறுப்பை தானம் கொடுத்தது திருப்தியளிக்கிறது என கூறியுள்ளார்.


தற்போது Jeff-ன் உடலில் Bryan கணையம் மற்றும் Terri-ன் சிறுநீரகமும் உள்ளதால் ஒருவகையில் கணவன்-மனைவி மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என கூறினால் அது மிகையாகாது.