இலங்கையில் தென்பட்ட அரை சூரிய கிரகணம்!!

774

சூரிய கிரகணம்

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் நேற்று நிகழவுள்ளது. இலங்கை மக்களுக்கு அரைச் சூரிய கிரகணத்தை நேற்று அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரைச் சூரிய கிரகணம் கொழும்பு பிரதேதசத்தில் காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நிகழ்ந்துள்ளது. அரைச் சூரிய கிரகணம் முழுமையாக காலை 11.51 மணியளவில் காட்சியளித்துள்ளது.

இந்த ஆண்டின் முழுமையான சூரிய கிரகணம் கொங்கோ நாடு உட்பட ஆபிரிக்க நாடுகளிலும், சவுதி அரேபியா, யேமன் மற்றும் ஓமான் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும் காட்சியளித்துள்ளது.

இலங்கை மற்றும் இத்தாலி, துருக்கி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அரைச் சூரிய கிரகணம் காட்சியளித்துள்ளதாக ஆத்தர் சீ க்லார்க் நிலையம் தெரிவித்துள்ளது.