கொழும்பு, புறக்கோட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 82 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை, ஓல்கோட் மாவத்தை மற்றும் மல்வத்த வீதி உள்ளிட்ட 5 இடங்களில் பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முகாமையாளர் 82 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.