வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது!!

1575


புதூர் நாகதம்பிரான்..


வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (22.06.2020) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.இதன் போது பக்த அடியார்கள் காலை முதல் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.


குறித்த விழாவிற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்துள்ளதுடன், ஆலய வழிபாட்டிலும் பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தனர்.


கோவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு 80 பக்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆலய உற்சவத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் ஆலய வளாகத்தினை சூழ பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளும் பேணப்பட்டு வருகின்றன.