கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பத்தில் சிக்கல்!!

1963


கட்டுநாயக்க விமான நிலையம்..



எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வழமையான விமான பயணங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.



எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை இதுவரை மேற்கொள்ளவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.




விமான பயண செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை என நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைசார் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்கமைய விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் கொரோனா என்ற கொடிய நோய்க்கு மத்தியில் விமான நிலையத்தை திறப்பதற்கு சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பே மிக முக்கியமாகும். அவர்களின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.


கொரோனா தொற்றிற்கு மத்தியில் விமான நிலைய செயற்பாட்டு நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது ஏற்படும் பல சிக்கல்களுக்கு தீர்வு தேட நேரிடும்.

கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுவதற்காக பீசீஆர் பரிசோதனைக்காக செலவிடப்படும் பணத்தை விமான பயணிகளிடம் அறிவிடும் முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைக்காக ஒருவரிடம் 6500 – 8000 ரூபாய் வரையான பணம் அறவிட நேரிடும். விமான நிலையத்தை திறந்த பின்னர் அந்த பணத்தை அரசாங்கத்தினால் ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-