பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா!!

423


கொரோனா..


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் ஹபீஸ், இடதுகை பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.ஏற்கனவே மூன்று வீரர்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே மேலும் 7 பேரின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுலா செல்வதற்காகவே இவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதேவேளை உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொக்கோவிக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். சேர்பிய நாட்டு தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.