கிளிநொச்சியில் தமது வீட்டிற்கான பாதை அமைத்துத்தரக்கோரி ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்!!

895

கிளிநொச்சியில்..

தமது குடியிருப்புக்கு செல்வதற்கான வீதியை பெற்றுத் தருமாறு தெரிவித்து கிளிநொச்சியில் குடும்பம் ஒன்று நேற்று பிரதேச செயலகம் முன்பாக போ ராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

காலை 9.30 மணியவில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக குறித்த குடும்பத்தின் உறுப்பினர்களால் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தாம் குடியிருக்கும் காணிக்குள் செல்வதற்கு சிலரால் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், அதனால் தமக்கான போக்குவரத்திற்காக பாதையை பெற்று தருவதற்கு கால இழுத்தடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தே குறித்த குடும்பம் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த நிலையில் போ ராட்டத்தில் ஈடுபட்ட குறித்த குடும்பத்தினரை பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ளி கிராம சேவையாளர் கண்டாவளை பிரதேச செயலாளரை சந்திப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

போ ராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினருக்கும், கண்டாவளை பிரதேச செயலாளரிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. குறுகிய காலத்திற்குள் குறித்த வியத்திற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையில், குறித்த காணி விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் உதவி கேட்டிருந்தோம். அவர்கள் எம்மை வந்து பார்த்தது கிடையாது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடமும் தெரிவித்திருந்தோம். உடடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்களால் எதுவும் இடம்பெறவில்லை. வீட்டிற்கு வந்து இதுவரை யாரும் பார்க்கவும் இல்லை. இவ்வாறான நிலையில் போ ராட்டத்தை தான் முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த போ ராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்திற்கான தீர்வினை இரண்டு வாரத்திற்குள் பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் கூறியுள்ளார்.

போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குடியமர்ந்துள்ள காணியானது அவர்களது சொந்தக்காணியல்ல. வேறு உரிமையாளரின் பெயரில் உள்ள காணியில் இவர்கள் குடியேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் சட்ட ரீதியான பல விடயங்கள் முன்னெடுப்பதில் சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி உரிமையாளருடன் ஓர் இணக்கப்பாட்டுடனேயே குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும். மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையுடனும், காணி உரிமையாளருடன் சமரசமான முறையிலும் 2 வாரத்திற்குள் குறித்த குடும்பத்தினருக்கான போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் பாதை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுக்க உள்ளதாகவும் கண்டாவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.