வவுனியா ஒமந்தையில் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்து!!

664


விபத்து..


வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (26.06.2020) மதியம் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாடொன்று வீதியின் குறுக்கே பாய்ந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ் விபத்துச் சம்பவத்தில் வான் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மாடு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளது. மேலும் வானில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.


சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.