வெளிநாட்டிலிருந்து ஒரேயொரு பயணியுடன் இலங்கை வந்த விமானம்!!

1024

ஒரேயொரு பயணியுடன்..

இந்தியாவில் இருந்து ஒரேயொரு இலங்கை பயணியுடன் விமானம் ஒன்று மத்தல விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளது. இன்டிகோ விமான சேவையின் விசேட விமானத்திலேயே குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை பயணியே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த பயணிக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள வெளிநாட்டு கப்பலில் பணியாற்றும் இந்தியகள் 54 பேர் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்காக குறித்த விசேட விமானம் மத்தலவுக்கு வருகைத்தந்துள்ளது.

இந்தியாவின் பெங்களூர் நகர விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இன்டிகோ விமான சேவை மத்தலவுக்கு வருகை தந்துள்ளது.