கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதியை அறிவித்த அமைச்சர்!!

421


கட்டுநாயக்க விமான நிலையம்..


ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் சுகாதார பிரிவினால் இதற்கான அனுமதி இதுவரையில் வழங்கப்படவில்லை.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தை ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.