ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் : அதற்கு அவர் கூறியுள்ள காரணம்!!

9850


ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை..


இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் இளைஞர், இரண்டு அழகிய இளம்பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.Saepul Bahri என்ற 28 வயது இளைஞன் தான் Hariani மற்றும் Mustiawati என்ற இரு இளம்பெண்களை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.


கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். இருப்பினும், விதிமுறைகள் காரணமாக, ஒரு திருமணத்தை மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


அதனால் Saepul – Hariani திருமணம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. மணப்பெண் Hariani கூறுகையில், மலேசியாவில் ஆறு மாதங்கள் வேலை செய்துவிட்டு Saepul திரும்பிய போது தான் அவரை பார்த்தேன்.

பார்த்த உடனேயே அவரை எனக்கு பிடித்தது. நான் இதற்கு முன்னர் யாரையும் காதலித்தது இல்லை என கூறினார். Mustiawati கூறுகையில், நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன், ஆனால் என் மண வாழ்க்கை Saepul உடன் தான் என முடிவு செய்து அவரை மணந்தேன் என கூறினார்.

மணமகன் Saepul கூறுகையில், இருவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஒருபோதும் திட்டமிடவில்லை, ஆனால் அவர்களுடன் காதல் கொண்ட பிறகு, ஒருவரை திருமணம் செய்வது குறித்து என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

அதற்கு பதிலாக நான் இருவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது, திருமணம் செய்து கொள்ள என் பெற்றோரும் எனக்கு ஆசீர்வாதம் அளித்தனர் என கூறியுள்ளார்.