வவுனியாவில் 3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பாடசாலைகள்!!

1133


3 மாதங்களின் பின்னர்..


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வவுனியாவிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.


வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் முகக்கவசங்களை அணிந்த வண்ணம் அதிபர், ஆசிரியர்கள் காலை வேளையிலேயே பாடசாலைக்கு வருகை தந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.


கைகளை கழுவுவதற்கான வசதிகள் வவுனியாவில் சில பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பாடசாலைகளில் இவ் வசதிகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.