இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை : ஐரோப்பிய ஒன்றியம்!!

785


ஐரோப்பிய ஒன்றியம்..



உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுக்கான நாடுகள் பட்டியலில் பரிசீலிக்கப்படாதபோதும் இலங்கை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று வலியுறுத்தியுள்ளது.



ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.




அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தற்காலிக தடையை நீக்குவது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளன.


உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான செயல்முறை சிறப்பாக நடைபெற்று வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான இறுதி முடிவு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஷெங்கன் நாடுகளின் உரிமையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.