வெளிநாடு ஒன்றில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இலங்கையர் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

314


கள்ளச்சாராயம்..


குவைத் சல்வா பகுதியில் இலங்கையர்களினால் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத ம துபான உற்பத்தி நிலையம் ஒன்று அந்நாட்டு பா துகாப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.பா துகாப்பு பிரிவு தகவலுக்கமைய இரவு கடமையில் ஈடுபட்ட பா துகாப்பு அதிகாரி, நபர் ஒருவர் பை ஒன்றை கொண்டு செல்வதனை அவதானித்துள்ளார். அதன் பின்னர் இலங்கையர் குறித்த பையை வீசிவிட்டு கட்டடம் ஒன்றிற்கு ஓடிச் சென்றுள்ளார்.


அதற்கமைய பா துகாப்பு அதிகாரிகள் குறித்த கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இலங்கையரை கைது செய்து வி சாரணை நடத்தியுள்ளனர்.


இதன்போது சட்டவிரோத ம துபானம் தயாரிக்கும் 39 பெரல்களும் அவற்றினை காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.