சீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

1269

புதிய வகை காய்ச்சல்..

சீனாவில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி H1N1 காய்ச்சலில் இருந்து வந்த இந்த வைரஸ், பண்ணைகளில் பணிபுரியும் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அடையாளம் காணப்பட்ட புதிய காய்ச்சல் 2009 பன்றிக் காய்ச்சலைப் போன்றது, ஆனால் சில மாற்றங்களுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நேரத்தில் வைரஸ் ஒரு தொற்றுநோயாக உருவாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர், எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படகூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம், இதனால் எதிர்காலத்திலும் நாங்கள் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.