இளம் வயது இலங்கை கணவருக்காக ஒரு லட்சம் பவுண்ட் செலவு செய்த பிரித்தானிய பெண் : பணத்தை மீளப்பெற போ ராட்டம்!!

1548

கொ லை செய்யப்பட்ட இலங்கை கணவனின் குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு லட்சம் பவுண்ட்ஸை மீளப்பெருவதற்காக பிரித்தானிய பெண் ஒருவர் போ ராடி வருகின்றார்.

அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பரோவை சேர்ந்த 61 வயதான Diane Peebles என்ற பெண்ணே இவ்வாறு பணத்தை மீட்க போராடி வருகின்றார்.

குறித்த பெண் 2017ம் ஆண்டு தனது 33 வயதான கணவர் பிரியன்ஜன டி சொய்ஸா கொ லை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணையும் கொ லை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அந்த பெண் அதிஷ்டவசமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த பெண் தனது இலங்கையை சேர்ந்த இளம் கணவருக்காக செலவு செய்த பணத்தினை மீளப்பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது கணவருடன் வசிப்பதற்கு வீடு ஒன்றினை நிர்மானிப்பதற்கு 60 ஆயிரம் பவுண்ட்ஸ் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் சொத்து வைத்திருப்பது கடினம் என்பதால், குறித்த வீட்டினை தனது கணவர் பெயரில் வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், வீட்டிற்கு தேவையான தளபாடங்களை வாங்குவதற்கும் சுமார் 31 ஆயிரம் பவுண்ட்ஸ்களை குறித்த பெண் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் ஸ்கொட்லாந்தில் இருந்த தனது வீட்டை விற்பனை செய்த பின்னர் இலங்கைக்கு வந்தவர் பிரியன்ஜனவுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டு சந்தித்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றவர் ஸ்கொட்லாந்தில் இருந்த வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பின்நாளில் தனது கணவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்கொட்டிஷ் சட்டத்தரணி ஒருவர் ஊடாக தனது கணவனின் குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு லட்சம் பவுண்ட்ஸை மீளப்பெருவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.