வடக்கில் உள்ள மக்களை மட்டுமல்லாமல் தெற்கில் உள்ள மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்காக சர்வதேச சக்திகள் ஜெனிவாவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காலி, உடுகம வீதியின் அபிவிருத்தித் திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி அந்த சக்திகள் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
பாதுகாப்பு படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் உள்நாட்டு, வெளிநாடடு சதித்திட்டங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.