ஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

2125

ஆசிரியர்களின் கடமை நேரம்..

எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம் ஆண்டு வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டுள்ள காலம் வரை கடமையாற்றினால் போதுமானது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் மேலதிக பணிகளை வழங்கும் சந்தர்ப்பங்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய தேவையில்லை.

இதனிடையே ஜூலை 6 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு மாகாண , வலய கல்வி பிரதானிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்குள் சுகாதார அறை, கைகளை கழுவும் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்து கூடிய கவனத்தை செலுத்துமாறும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.