நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : கால நிலை மாற்றத்தினால் நிறம் மாறும் மரக்கறி,தேயிலை!!

865

Nuwaraliaநுவரெலியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும்குளிர் காலநிலை காரணமாக பனிகொட்டுகின்றது. பல இடங்கள் பனிமூட்டத்துடன் காட்சியளிப்பதுடன் சுற்றுலா பயணிகளை வருகை தந்து பார்வையிடும் படி நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 5-6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டம் மற்றும் அதனை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் கடும் பனியுடன் கூடிய காலநிலை, பகல் வேளைகளில் நிலவும் கடும் வெயில் காலநிலையால் பச்சை நிறத்தில் காணப்படும் தேயிலை, மரக்கறி தோட்டங்கள் கருகி நிறமாற்றம் ஏற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.

இதனால் சில தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் பொருளாதார நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.