குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்கள்!!

2273

குசல் மென்டிஸின் வாகனத்தில்..

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு உ யிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குசல் மென்டிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தவறான வீதியில் குசல் மென்டிஸ் பயணித்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்த நபர் 64 வயதுடையவர் எனவும் அவர் பாணந்துறை – கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத்துனர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவராகும். பூதவுடலை அஞ்சலிக்காக வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அவரது வீடு காணப்படுகின்றது. அவரது பூதவுடல் வீட்டிற்கு அருகில் உள்ள இடம் ஒன்றிலேயே வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தனது பணியை ஆரம்பிப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குசல் மென்டிஸிற்காக ஆஜராகிய சட்டத்தரணி கபில வைத்தியரத்ன, இந்த சம்பவம் தொடர்பில் தனது வருத்தத்தை வெளியிட்டதுடன், குசலுக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

அவர் கு டிபோ தையில் இருந்தார் என்பதற்கு எவ்வித அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டத்தரணி குறிப்பிடடுள்ளார்.

உ யிரிழந்த நபரின் மனைவிக்கு அநீதி இழைக்காத வகையில் பொருத்தமான அபராதம் குசல் மென்டிஸினால் வழங்கப்படும் என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உ யிரிழந்த நபரின் இறுதி அஞ்சலி நடவடிக்கைக்காக 80 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு லட்சத்து 20ஆயிரம் பணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் ரூபாய் அபராம் எதிர்பார்ப்பதாக உ யிரிழந்த நபரின் மனைவி தெரிவித்ததற்கமைய அந்த பணத்தை வழங்குவதற்கு தயார் என குசல் குறிப்பிட்டுள்ளார்.