விஷாலை விரட்டுவோம், குரைக்கும் சந்தானம் : நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரம்!!

375

visalநடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன. இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து உள்ளது.

மிரட்டல் கடிதங்களை நடிகர்கள் தற்போது வெளியிட்டு உள்ளனர். விஷாலுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது..

பிழைப்பு தேடி ஆந்திராவை விட்டு ஓடிவந்து தமிழ்நாட்டில் ஒண்டியது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டாராக ஆகவும் கனவு காண்கிறாய். சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடித்தாலும் தகுதியான பொருத்தமான வேஷம் கொடுத்தவர் இயக்குனர் பாலா.

தோற்றுப்போன நடிகர்களையும் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் போல் அலைகின்ற பெயர் தெரியாத நடிகர்களையும் கூட்டமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நீ பெரிய ஆளா?. நாசர், சந்தானத்துடன் சேர்ந்து வந்தாலும் நீங்கள் புல்லை போன்றவர்கள். சாய்ந்ததுபோல் சாய்ந்து மழை பெய்தவுடன் திரும்பவும் தளிர் விடுவீர்கள். சங்கத்தின் நலனுக்காக உங்களை வேறொடு பிடுங்கி எறிவோம். வந்தாய் ஒண்டினாய், சொந்த படம் எடுத்து கதாநாயகனாக இருக்கிறாய் அத்தோடு இருந்துகொள் என்று குறிப்பிட்டு உள்ளது.



சந்தானத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..

உனக்கு என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, சார்லி போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியுமா, தெரிந்துகொள். எங்களைபோல் நாடக நடிகர்களாக இருந்தவர்கள். நீ எந்த அட்ரசோடு யார் ஏமாந்தான் என்று நடிகனானாய். ஏதோ மக்கள் ஏமாந்தார்கள். என்று காலம் ஓட்டுகிறார்.

வீணாய் போன நாசரோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார். ஆனானப்பட்ட வடிவேலுவே ஓரங்கட்டப்பட்டார். நீ எம்மாத்திரம். தெருவோடு போகிற நாய்களோடு சேர்ந்து குரைப்பதை நிறுத்திக்கொள். காமெடியனுக்கு குரல்தான் முக்கியம். அந்த குரலை பிழைப்புக்காக மட்டும் பயன்படுத்து என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாசருக்கு வந்துள்ள கடிதம் விவரம் வருமாறு..

நடிகர் சங்கத்தை காட்டிக்கொடுத்த ஒண்ணரைக் கண்ணன் குமரிமுத்துக்கு குரல் கொடுக்கிறீர்கள். சங்க நிர்வாகிகள்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள். நேற்று முளைத்த நடிகர்களை சேர்த்து வைத்து சண்டைக்கு வருகிறீர்கள். இவர்களுக்கு சினிமாவில் சண்டை போடவே டூப் தேவைப்படுகிறது. ஹீரோவாகும் தகுதி இல்லை.

பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் போகிறீர்கள். ஊர் ஊராக பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அலை குரல் எழுப்பினால் பாத்திரம் ஏந்த முடியாமல் போகும். தேவர் மகனில் வடிவேல் சொன்ன வாசகம் ஞாபகம் இருக்குமே என்று நினைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த கடிதங்கள் திரைப்பட நாடக நடிகர்கள் மதுரை என்ற பெயரில் இருந்து வந்துள்ளது.