13 வயது மாணவனை காதலித்து மணந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!!ஆசிரியைக்கு நேர்ந்த..


அமெரிக்காவில் 13 வயது மாணவனை காதலித்து திருமணம் செய்து பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை புற்றுநோயால் உ யிரிழந்துள்ளார்.Mary Kay Letourneau என்ற பெண் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனான Vili Fualaau உடன் தவறான தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.


அந்த சமயத்தில் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் Mary Kay. இந்த நிலையில் சிறுவன் Vili மூலம் மீண்டும் கர்ப்பமான Mary Kay மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


அப்போது இனி சிறுவன் Vili உடன் எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என நீதிமன்றம் Mary Kayக்கு உத்தரவிட்டது.

இதன்பின்னர் குழந்தையை பெற்றெடுத்த Mary Kay நீதிமன்றத்தின் உத்தரவை மீறி Vili உடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அவர் கர்ப்பமானார், இந்த முறை அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சிறையிலேயே குழந்தை பெற்றெடுத்த Mary Kay 2004ஆம் ஆண்டு விடுதலையானார். இதன் பின்னர் வாலிபனாக ஆன Vili-ஐ திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இந்த தம்பதி 12 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் Vili தனது மனைவி Mary Kayயிடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த சூழலில் 58 வயதான Mary Kay திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய Mary Kay கடைசி காலத்தில் உடல் எடை குறைந்து, மிகவும் அவதிப்பட்டு பரிதாப நிலையில் இறந்ததாக தெரியவந்துள்ளது.