வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை!!மழை..


வவுனியாவில் இன்று (10.07.2020) மதியம் 2.15 மணி தொடக்கம் மழை 6.15 மணிவரை காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தது.நான்கு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.


குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பநிலை காரணமாக குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.