இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை : பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

729

கொரோனா இரண்டாவது அலை..

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டத்தை உருவாக்கி, தனிமைப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை துரிதமாக வெளியிட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால், கொரோனா என்ற இரண்டாவது அலை கட்டுப்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகந்தை கந்தகாடு மற்றும் சிலாபம் மாரவில பிரதேசங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.