அடிதடி சண்டையில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர்கள்!!

383

NZ

ஆக்லாந்தில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 40 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் 29 வயதான ஜெஸ்சி ரைடர், 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும் களம் இறங்கும் ஆடும் லெவன் அணியில் இவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரைடரும், பிரேஸ்வெல்லும் அடிதடி சண்டையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஆக்லாந்து டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் அங்குள்ள பாருக்கு சென்று அதிகாலை மது அருந்தி கும்மாளம் போட்டுள்ளனர்.



போதை உச்சிக்கு ஏறிய நிலையில் திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ரைடருக்கு கையிலும், பிரேஸ்வெல்லுக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது நடத்தையை கண்டு கடும் கோபம் அடைந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது, இருவரும் தங்களுக்குள் சண்டை போட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.