நாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

2274


பாடசாலைகளுக்கும் பூட்டு..



திடீரென இலங்கையில் அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து நாடு மீண்டும் ஸ்தம்பிக்கப்படவுள்ளநிலையில் உள்ளது.



இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.




கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்டங்களின் கீழ் கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது


கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி : இலங்கையில் கொரோனா தீவிரம் : பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!!

கொரோனா தீவிரம்..

நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர அவதானத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.