புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 5ஆம் தர மாணவிக்கு கொரோனா!!

1737

கொரோனா..

முதல் முறையாக நேற்றைய தினம் பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜாங்கனை பிரதேசத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் 5, 11 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை கற்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

அதற்கமைய கடந்த வாரத்தில் 3 நாட்கள் குறித்த மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்த மாணவியின் தந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அத்துடன் அவரது ஒன்றரை வயது மகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் அவரது 11 வயது மகளுடன் நெருங்கி செயற்பட்டவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் ராஜாங்கனவை அண்டிய பிரதேசங்களுக்கு பயண தடை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுர பிரதேசத்தின் தொற்று நோய் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை அறிக்கை முடிவுகளுக்கமைய குறித்த பிரதேசத்திற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-