யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

795

யாழ் வடமராட்சிக் கிழக்கில்..

இந்தியாவிலிருந்து க ஞ்சா போ தைப்பொ ருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தே டப்பட்டு வருகிறார்.

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை க ஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீ ட்கப்பட்டன. எனினும் அதனைக் க டத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அந்தப் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் த லைம றைவாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது. அதனால் அங்கிருந்து க ஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு க டத்தி வருவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே இந்த நிலையிலேயே க ஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் க ஞ்சா க டத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் க ஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் த லைம றைவாகி இருப்பதனால் அவர் எங்கு இருக்கின்றார்…? அவருக்கு கொரோனா இருக்குமா…? அவரால் சமூகத்திற்கிடையில் பரவிவிடுமா…? என அ ச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.