வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டு வரப்பட்ட ச டலங்களால் குழப்பம்!!

829

கட்டுநாயக்க விமான நிலையம்..

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு ச டலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல் வைக்கப்பட்டு இந்த இரண்டு ச டலங்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சடலம் குவைத்தில் பணியாற்றிய நிலையில் வாகன விபத்தில் உ யிரிழந்த ஆண் நபராகும்.

அந்த ச டலம் நாவலப்பிட்டிய பிரதேச விலாசம் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய ச டலம் குவைத் நாட்டில் இருதய நோயினால் உ யிரிழந்த பெண்ணாகும். அந்த சடலம் நிக்கரவெட்டிய பிரதேச விகாரையின் தேரர் ஒருவரின் சகோதரி என குறிப்பிடப்படுகின்றது.

ஆணின் ச டலத்தின் உரிமையாளர்களான நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர்கள், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வந்து ப ரிசோ தனையிட்ட போது அந்த பெண்ணின் ச டலம் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேரந்த வந்த தேரர் ஆண் ஒருவரின் ச டலத்தை கொண்டு சென்று நல்லடக்கம் செய்துள்ளார். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் தங்கள் உறவினர்களின் சடலமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் பெண்ணின் சடலத்தையே நல்லடக்கம் செய்யுமாறு நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தேரர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கு நாவலப்பிட்டிய குடும்பத்தினர் எ திர்ப்பு வெளியிட்டமையினால் அந்த பி ரச்சினை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இன்று இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.