யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்!!

903

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பொது மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 16 மாவட்டங்களில் ஏராளமான மக்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டதை அடுத்து இவ்வாறு பலர் தனிமைப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பாஹா, காலி, பொலனறுவை, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம், கேகால்லை, மொனராகல, புத்தளம், ஹம்பாந்தோட்ட, மாதறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் சுய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நோயாளிகளைக் கண்டறிந்து வைரஸைக் கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் PCR சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.