அரை நூற்றாண்டு ஒன்றாக வாழ்ந்த தம்பதிகளுக்கு விருது!!

369

Cupleகடந்த 1960 ஆம் ஆண்டு காலத்தில் கம்யூனிச நாடான போலந்தில் 50 ஆண்டு கால மணவாழ்க்கையை ஒன்றாகக் கழித்த ஜோடிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதியிடம் இருந்து விருது கொடுத்து கௌரவிக்கும் வழக்கம் தொடங்கியது.

தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் ஆண்டுக்கு 65,000 விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த விருதினைப் பெறுவதற்காக 18,000 நாட்கள் நீங்கள் உழைத்திருக்க வேண்டும். மற்ற விருதுகளுக்கான காலக்கெடு மிகவும் எளிதாகும். எனவே, அரை நூற்றாண்டை ஒன்றாகக் கழிப்பதென்பது சிறப்பு வாய்ந்த செயலாகும் என்று வார்சா நகர மேயரான ஹன்னா குரோன்கிவிக்ஸ்-வால்ட்ஸ் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பொன்விழா கொண்டாடும் தம்பதியருக்கு ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை சார்பில் ஒரு வாழ்த்து அனுப்பப்படும்.

இங்கிலாந்திலோ அறுபது ஆண்டுகளை ஒன்றாகக் கழித்த தம்பதியினருக்கு ராணியின் சார்பில் வாழ்த்து கிட்டும். அவரே ஏழு வருடங்களுக்கு முன்னர் இந்த விழாவைக் கொண்டாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் அரிதான விஷயமாகும். வேறு எந்த நாட்டிலும் திருமணம் நிலைத்திருக்க இப்படி ஒரு விருது வழங்கப்படுவதில்லை என்று ´மெடல்ஸ் ஆப் தி வேர்ல்ட்´ என்ற இணையதளப் பிரிவை இயக்கும் மெகன் ராபர்ட்சன் குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட தொழில்துறையிலோ, வர்த்தகத்திலோ சாதனைகள் புரிந்தவர்களுக்கு அரசு விருது வழங்கி வரும் நிலையில், திருமண வாழ்வின் சாதனைகளுக்காக இதே போன்றதொரு விருது அளிக்கப்படுவது அந்நாட்டின் சமூக வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வரலாற்றுத்துறை அறிஞர் மர்சின் ஸ்ரெம்பா குறிப்பிட்டுள்ளார்.