கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்த இளைஞர் உ யிரிழப்பு!!

970

புகையிரதத்தின் முன் பாய்ந்த..

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உ யிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இளைஞர் த ற்கொ லை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.