யாழ். சாவகச்சேரி – மீசாலையில் புதிய புகையிரத நிலைய A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ரக்டர் வாகனம் ஒன்று A9 வீதியை வேகமாகக் கடக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் வெள்ளாம்போக்கட்டியைச் சேர்ந்த இராசப்பு அருந்தவராசா (33), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த முருகேசு கணேஸ்குமார் (34) ஆகியோரே படுகாயடைந்துள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன், சாரதியைச் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.