அடக்கம் செய்யப்பட்டு 7 ஆவது நாளில் உயிருடன் வந்த பெண் : கடவத்தை பிரதேசத்தில் சம்பவம்!!

485

Womenவிபத்தொன்றில் உயிரிழந்த பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டு 7ம் நாள் கரும கிரியை நடத்திக் கொண்டிருந்த போது வீட்டுக்கு திரும்ப வந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் கடவத்தை பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த 8ம் திகதி கடவத்தை ரண்முத்துகல என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்த முதிய பெண் தமது தாய் என அந்த பெண்ணின் மூன்று பிள்ளைகள் அடையாளம் காட்டினர்.

இதனையடுத்து சட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்கள் சடலத்தை எடுத்துச் சென்று மூன்று நாட்களின் பின்னர் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கான 7ம் நாள் கரும கிரியைகள் இன்று அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளன. இதன்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் வீடு திரும்பினார்.



தாயின் வருகையை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிய பிள்ளைகள் பின்னரே ஏற்பட்ட தவறை உணர்ந்துள்ளனர். இவர்கள் தமது தாயின் சடலம் எனக் கருதி வேறு ஒரு பெண்ணின் சடலத்தை எடுதது வந்து அடக்கம் செய்துள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.