கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பயணிகள் பஸ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.
இன்று பகல் 12 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க அதிவேக வீதி நிருவாக பணிப்பாளர் டி.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார். தீயினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.