கோர விபத்தில் தாய், தந்தை ப லி!!

608

கோ ர விபத்தில்..

யக்கல, கிரிந்திவெல வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை உ யிரிழந்துள்ளனர்.

அத்துடன், உ யிரிழந்தவர்களின் இரண்டு மகள்களும், காரின் சாரதியும் ப டுகா யமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(24.07.2020) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளைக்கு சென்று மீண்டும் திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காரின் சாரதி போ தையில் இருந்துள்ளதாகவும், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இரண்டு மகள்களும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.