அஜித் குமாருக்கு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை!!

420

Ajithஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜித் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

அஜித் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து தானே நடித்தார். ஆர்யா காரை ஓட்ட அஜித் காரின் முன்பகுதியில் நின்று செல்லும் காட்சியை படமாக்கியபோது விபத்து ஏற்பட்டது.

அந்த ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் அஜித்தின் காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி பெற்ற பிறகு அவர் நடிப்பை தொடர்ந்தார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு அஜித் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரோ ஆரம்பம், வீரம் படங்களின் படப்பிடிப்பு முடியட்டும் பார்க்கலாம் என்று தெரிவித்துவிட்டார்.



ஆரம்பம் படம் வெளியாகி, வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கடந்த டிசம்பர் மாதமே அஜித் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வீரம் படத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர் இந்த மாத இறுதியில் தொடங்கும் கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக அனுஷ்கா ஜோடி சேர்கிறார்.

இத்தனை மாதங்களாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட அஜித் ஒரு வழியாக வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறாராம். இந்த முறையாவது அறுவை சிகிச்சையை தள்ளிப்போடாமல் இருக்கட்டும் என்று அவரது இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.