திடீரென நிறம் மாறிய உலகப் புகழ்பெற்ற ஏரி : காரணம் இதுதானாம்!!

493

உலகப் புகழ்பெற்ற ஏரி..

இந்தியாவின் Lonar Lake தண்ணீர் திடீரென நிறம் மாறியதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமானது Lonar Lake, சுமார் 52,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுகோள் ஒன்று மோதியதில் பள்ளம் உருவாகி ஏரியானது.

பச்சைபசேலென்று பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளிக்கும் இந்த ஏரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கென்று கூட்டம் சேரும், இந்நிலையில் இந்த ஏரியின் தண்ணீர் திடீரென பிங்க் நிறத்தில் மாறியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

இதற்கு Haloarchaea எனும் நுண்ணுயிரிகளே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், இந்த நுண்ணுயிரிகள் உப்பு தண்ணீரில் செழித்து வளருவதே நிறமாற்றத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் மும்பை நீதிமன்ற உத்தரவின்படி ஏரியின் தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி மையத்திற்கு மாநில வனத்துறையினர் வழங்கினர்.

அங்கே விரிவாக ஆய்வு நடத்தப்பட்டதில், இந்த நிறமாற்றம் ஒன்றும் நிரந்தரமானது அல்ல, குறித்த நுண்ணுயிரிகள் நீருக்கடியில் சென்றதும் தண்ணீரின் நிறம் மாறிவிடும் என தெரிவித்துள்ளது.