இருவர் படுகாயம்..

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வானொன்றும், லொறியொன்றும் மோதியதில் இரண்டு பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ள சீனக்குடா விமான படைத்தளத்திற்கு அருகில் அமைந்துள்ள பம்பறாஹவுஸ் (பம்பறாகேவ்) வளைவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






