கட்டாரில் சிக்கியிருந்த 55 பேர் நாடு திரும்பினர்!!

357

55 பேர் நாடு திரும்பினர்..

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் உட்பட பயணிகள் 55 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பல்களில் சேவையாற்றிய இலங்கையர்கள் 47 பேரும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களில் பணியாற்றும் 02 குடும்பங்களை சேர்ந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் 08 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.