லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த தீர்மானம்!!

250


லங்கா பிரிமியர் லீக்..


லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை 2020 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20ம் திகதி நடத்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அனுமதி தருமாகயிருந்தால் இந்தப்போட்டிகள் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.இந்தப்போட்டிகள் ஆகஸ்ட் 8ம் திகதி நடைபெறவிருந்தபோதும் கொரோனா காரணமாக பின்தள்ளி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு அனுமதி வழங்குமானால் அடுத்த மாத இறுதியில் இந்தப்போட்டிகளை நடத்தமுடியும்.


ஏற்கனவே இந்தப்போட்டிகளில் பங்கேற்க 70 சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் 10 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களும் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில் போட்டிகளுக்கான அனுமதியின் நிமித்தம் சுகாதார அமைச்சுடன் சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மேலாளர் எஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.


இந்தப்போட்டிகளில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் அணிகள் பங்கேற்கவுள்ளன.

ஒவ்வொரு அணியும் 6 சர்வதேச வீரர்களை இணைத்துக்கொள்ளுமாறு கேட்கப்படும். இதேவேளை போட்டிகள் ஆர் பிரேமதாச, ரங்கிரி தம்புள்ளை, பல்லேகல்ல, சூரியவேவ ஆகிய மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.