வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவலரண்!!

479

காவலரண்..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் காணப்பட்ட பொலிஸ் காவலரண் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உத்தரவின் பேரில் வவுனியா புகையிரத நிலைய பிரதான வீதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பண்டாரிக்குளம் செல்லும் பிரதான பாதை ஒடுங்கிய பாதையாக காணப்படுவதுடன் அவ்விடத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணில் பொலிஸார் வாகனத்தினை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதனாலும் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உடனடியாக செயற்பட்டு குறித்த பொலிஸ் காவலரணை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு புகையிரத நிலைய பிரதான வீதியில் மாற்றியமைத்துள்ளார்.