தற்கொலை செய்து கொள்ள போவதாக காதலிக்கு குறுஞ் செய்தி அனுப்பி அறிவித்த காதலன், தனது வீட்டிற்குள் சேலை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை கொங்கொடி தோட்டத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 11ம் திகதி வீட்டில் எவரும் இல்லாத சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்துள்ள பொலிஸார் கூறினர்.
குறித்த இளைஞர் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்புக்கு தொழில் தேடி சென்றுள்ளதுடன் அங்கு ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.
பெண் வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக 10 நாட்களுக்கு முன்னர் தனது சொந்த இடத்திற்கு திரும்பியதாக இளைஞரின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தோட்டத்தில் வேலை முடிந்து மாலை 4 .30 அளவில் வீட்டுக்கு திரும்பிய போது தனது மகன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.