இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!!

409

கொரோனா தொற்று..

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 34,968 பேர் கொரோனாவால் உ யிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 10,20,582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 32,553 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,28,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் அதிக பாதிப்புடைய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,741 பேர் உ யிரிழந்துள்ள நிலையில், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.