வவுனியாவில் அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறு மாவட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை!!

400

நாடாளுமன்ற தேர்தலானது நாளை(05.08.2020) நடைபெறவுள்ள நிலையில் அனைத்து மக்களும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா வர்த்தக சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இதன்போது, கொவிட் 19 அ ச்சுறுத்தல் காரணமாகவும், அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடு காரணமாகவும் பொது மக்கள் சிலர் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது. இது ஜனநாயக நாடு ஒன்றில் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.

மக்கள் தாம் விரும்பும் சிறப்பான பிரதிநிதியை தெரிவு செய்ய வாக்குரிமையை பயன்படுத்துவது அவசியம் ஆகும். அதற்கு அமைவாக வவுனியா மாவட்ட மக்கள் எந்தவித அ ச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம், பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினர் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வீணான குழப்பங்களை தவிர்த்து அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறும் பொது அமைக்குகள் கோரியுள்ளன.

ஆள்பவனை தீர்மானிக்க வேண்டியது ஆளப்படுகின்றவனே. அவ்வாறு தீர்மானிப்பதற்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு தேர்தல். அந்தத் தேர்தலில் உங்களிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆ யுதம் உங்கள் வாக்கே.

அந்த ஆ யுதத்தைப் பயன்படுத்தி உங்களை ஆளப் போகிறவர்களை தெரிவு செய்ய நீங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லாவிட்டால், அதன் கருத்து உங்களை ஆளப் போகிறவர்கள் நீங்கள் அல்லாது வேறு ஒருவர் தீர்மானிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதாகும் அதாவது உங்கள் உரிமையை நீங்களே மீறுகிறீர்கள் என்பதாகும்

ஆகவே வாக்களிப்பு நிலையத்திற்கு கட்டாயம் அனைவரும் சென்று வாக்கினை கட்டாயம் வேண்டுமேனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.